பொழுதுபோக்கு

பார்க்கவே கொஞ்ச தூண்டும் ரெட் கலர் குட்டி பாண்டா...

Malaimurasu Seithigal TV

மேற்குவங்கத்தில் விலங்கியல் பூங்காவில் வைத்து பராமரிக்கப்படும் சிவப்பு நிற பாண்டா கரடியானது அழகான குட்டி பாண்டா ஒன்றை ஈன்றது.

டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள பத்மஜா நாயுடு இமயமலை விலங்கியல் பூங்காவின் கீழ் உள்ள டாப்கி தாரா பாதுகாப்பு இனப்பெருக்கம் மையத்தில், வைத்து சிவப்பு நிற பாண்டா கரடி பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த பாண்டா கரடியானது, ஒரு அழகான குட்டி பாண்டா கரடியை பெற்றெடுத்தது.

இந்த அரிய வகை சிவப்பு நி்ற பாண்டா கரடிகள் மிகவும் ஆபத்தானவை என்றும் சிக்கிம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா, மற்றும் வட வங்காளம் ஆகிய மாநிலங்களில் உள்ள வனப்பகுதியில் இந்த சிவப்பு நிற பாண்டா கரடிகள் காணப்படும் என பாராமரிப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் தெரிவித்தனர்.

இந்த பாண்டா கரடிகள் இந்தியாவில் 5 ஆயிரம் மற்றும் 6 ஆயிரம் வரை மட்டுமே உள்ளன என்று இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் தெரிவித்துள்ளய்து.