லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் நடித்துள்ள விக்ரம் பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே இன்று வெளியானது. சென்னையில் ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சி காலை 4 மணிக்கு திரையிடப்பட்ட நிலையில், நள்ளிரவு முதலே திரையரங்குகளில் கொண்டாட்டம் களை கட்டியது. கோயம்பேட்டில் உள்ள தனியார் திரையரங்கு முன்பு நள்ளிரவு முதலே ஏராளமான ரசிகர்கள் கூடி ஆட்டம் பாட்டம் மற்றும் வான வேடிக்கையுடன் விக்ரம் படத்தை வரவேற்றனர்.
4 ஆண்டுகளுக்குப் பின் கமல்ஹாசனின் படம் திரையரங்குகளில் இன்று வெளியான நிலையில், அவர் அரசியலுக்கு வந்த பிறகு வெளியாகும் முதல் படமும் இது என்பது குறிப்பிடத்தக்கது.