பொழுதுபோக்கு

மீண்டும் இணையும் பாகுபலி படக்குழு?

இயக்குனர் ராஜமவுலி  இயக்கத்தில், நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான இந்தியா அளவில் ஹிட் அடித்த பாகுபலி படக்குழிவினர் மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Malaimurasu Seithigal TV

இயக்குனர் ராஜமவுலி  இயக்கத்தில், நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி மற்றும் பாகுபலி 2 திரைப்படங்கள்  இந்திய அளவில் பிரமாண்ட படைப்பாக சாதனை படைத்தது.

உலகளவில் திரையுலகினரின் கவனத்தையும் இப்படம் ஈர்த்தது.இப்பட த்தில் பிரபாஸ்,ராணா அனுஷ்கா,தமன்னா,சத்யராஜ்,  நாசர் உள்பட பலர் நடித்து இருந்தனர்.இந்நிலையில் தற்போது இந்த பிரம்மாண்ட கூட்டணி மீண்டும் புதிய படம் ஒன்றுக்காக இணையவுள்ளதாக கூறப்படுகிறது.பிரபாஸின் 26 வது படமாக உருவாக உள்ள இப்பட த்தை ஆர்ஆர் ஆர் பட வெளியீட்டுக்கு பின்பு ராஜமவுலி  இயக்கவுள்ளதாக டோலிவுட்டில் ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது.