பொழுதுபோக்கு

பிரபல பாலிவுட் நடிகரால் தான் சமந்தா–நாக சைதன்யா பிரிந்தனர்- கங்கனா சர்ச்சை பதிவு…  

நடிகை சமந்தா-நாகசைதன்யா விவாகரத்து குறித்து நடிகை கங்கனா வெளியிட்டுள்ள பதிவு சினிவா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Malaimurasu Seithigal TV

நடிகை சமந்தா-நாகசைதன்யா விவாகரத்து குறித்து நடிகை கங்கனா வெளியிட்டுள்ள பதிவு சினிவா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்தியாவின் பிரபல ஜோடியாக வலம் வந்தவர்கள் சமந்தா நாகசைதன்யா. சில வருடங்களுக்கு முன்பு அண்மையில் திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி, தற்போது விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகை கங்கனா, சமந்தா மற்றும் நாகசைதன்யா விவாகரத்து குறித்து வெளியிட்டுள்ள பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

"தென்னிந்திய நடிகர் ஒருவர் நான்கு வருடங்கள் திருமண வாழ்க்கை மற்றும் பத்து வருடங்களுக்கும் மேலாக அந்த நடிகையுடன் உறவில் இருந்தார். சமீபத்தில் அவர் விவாகரத்து நிபுணர் என்று அழைக்கப்படும்  பாலிவுட் நடிகர் ஒருவரை தொடர்பு கொண்டார். அந்த நடிகரை சந்தித்தவுடன் தான் நாக சைதன்யா விவாகரத்து முடிவை எடுத்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது.