பொழுதுபோக்கு

சமந்தா தான் எனக்கு பெஸ்ட் என கூறிய நாக சைதன்யா.. டைவர்ஸ் போஸ்ட்டை டெலீட் செய்த சமந்தா

நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த விவாகரத்து தொடர்பான பதிவை தற்போது நீக்கியுள்ளார்.

Malaimurasu Seithigal TV

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான ஜோடியாக வலம் வந்தவர் தான் சமந்தா மற்றும் நாக சைதன்யா. இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மனவேறுபாடு காரணமாக தங்களது 4 வருட காதல் திருமணத்தை முடித்துக்கொள்ள முடிவு செய்தனர்.

இந்த செய்தி இருவரின் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே பிரிவு என்பது பரவாயில்லை. ஏற்றுக் கொள்ளக்கூடியது தான். அவரவர்களின் சொந்த நலனுக்காக எடுக்கப்பட்ட பரஸ்பர முடிவு. சமந்தாவுக்கு மகிழ்ச்சி என்றால், எனக்கும் மகிழ்ச்சியே. அத்தகைய சூழ்நிலையில் விவாகரத்து என்பது சிறந்த முடிவாக இருக்கும் என நாக சைதன்யா கூறினார். மேலும் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தனக்கு ஏற்ற ரீல் ஜோடி சமந்தாதான் என நாக சைதன்யா கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த விவாகரத்து தொடர்பான பதிவை தற்போது நீக்கியுள்ளார். இதனால் இருவரும் மீண்டும் இணைவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.