பொழுதுபோக்கு

பிரபல நடிகருக்கு ஜோடியாகும் சம்யுக்தா மேனன்.!!

Malaimurasu Seithigal TV

வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் வாத்தி. இப்படம் தமிழ், தெலுங்கு திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய அளவில் தனுஷ் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்க இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து சம்யுக்தா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:-

தமிழ் தெலுங்கில் உருவாகும் மிக திறமையான நடிகர் தனுஷின் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் படத்தில் இணைந்தது மிகவும் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த அனைவருக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

'வாத்தி' படத்தை தயாரிக்கும் சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் முந்தைய படத்திலும் சம்யுக்தா மேனன் தான் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.