பொழுதுபோக்கு

‘சர்தார்’ பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய கார்த்தி...

சர்தார் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில், நடிகர் கார்த்தி பேசிய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

Malaimurasu Seithigal TV

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் உள்ள விஜயா மாலில் நடைபெற்றது. இதில் நடிகர் கார்த்தி, ராஷிகண்ணா, இயக்குனர் பிஎஸ் மித்ரன், லைலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். 

அதில் பேசிய நடிகர் கார்த்தி, “முதல் முறையாக நான் வயதானவன் கதாப்பாத்திரமாக நடித்துள்ளேன். இவ்வளவு ஆண்டு இருந்த அனுபவத்தை பரிசோதிக்கும் விதமாக இந்த படம் அமைந்துள்ளது. ஒரு பெரிய விஷயத்தை எளிமையாக புரிய வைக்க முயற்சி செய்துள்ளோம். இது ஒரு இந்தியன் spy படம். ஜேம்ஸ் பாண்ட் படம் போன்று இல்லை. 

என்னை மட்டும் அல்ல எல்லாரையும் டார்ச்சர் செய்துள்ளார். Spy திரில்லர் படம் என்று சொல்லியாச்சு அதனால் நெட் பிளிக்ஸ் போன்று எல்லா படங்களை எடுத்து வைத்து விடுவார்கள். அதற்காக பார்த்து பார்த்து செய்ய வேண்டி இருந்தது. இந்த படம் நமக்கு பெருமை சேர்க்கும் படமாக இருக்க வேண்டும் என அனைவரும் நிறைய உழைத்துள்ளனர். 

வில்லனுக்கு நிறைய மெனக்கெட்டு உள்ளார் இயக்குனர். ஹீரோவை விட வில்லனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. எந்த அங்கீகாரமும் இல்லாமல் நாட்டுக்காக உழைக்கும் நிறைய பேர் உள்ளனர்.

தீபாவளி வெளியீட்டு எல்லாருக்கும் ரொம்ப சிறப்பு அது மாதிரி சர்தார் படமும் இருக்கும் என நினைக்கிறேன். ரெட் ஜெயன்ட் ரிலீஸ் பிரச்னைகள் இல்லாமல் அனைவருக்கும் எடுத்து செய்கின்றனர். அவர்களுக்கு நன்றி. உதய்க்கு நன்றி. சிவாவின் பிரின்ஸ் படம் வருகிறது. இரண்டும் வெவ்வேறு படங்கள். அதனால் உங்களின் ஆதரவு வேண்டும்.” என கூறி பேசி முடித்தார்.