பொழுதுபோக்கு

பல வருடங்களுக்குப் பிறகு தமிழ் படங்களில் சரிதா!

புரட்சி கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகை சரிதா, பல வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் தனது தோற்றத்தை ஒரு தமிழ் படத்தில் கொடுக்க இருக்கிறார்.

Malaimurasu Seithigal TV

SK 22 என தற்காலிகமாக பெயரிடப்பட்ட நடிகர் சிவகார்த்திகேயனின் 22வது படம் தான் மாவீரன். மண்டேலா என்ற தனது முதல் படத்தின் மூலமே, தேசிய விருது பெற்ற இயக்குனரான மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை, ஷாந்தி டாக்கீஸ் தயாரிக்கிறது.

மாவீரன்:

கடந்த ஜூன் 28ம் தேதி இந்த படம் குறித்த தகவல் வெளியானதில் இருந்து, இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது தான் நிதர்சண உண்மை. இந்நிலையில், படத்தில், கதாநாயகியாக, அதிதி ஷங்கர் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி, மக்களிடையே நல்ல வரவேற்பௌப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, மேலும் ஒரு பிரபல நடிகை இந்த படத்தில் இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது படக்குழு.

மீண்டும் வருகைத் தரும் சரிதா:

பல வருடங்களுக்குப் பிறகு நடிகை சரிதா இணைந்துள்ளார். சிறப்பான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகை சரிதா, பல ஆண்டுகளாக, நடிப்பை விட்டு, முழு நேர டப்பிங் நாயகியாக உருவெடுத்திருந்தார்.

80களின் நாயகி:

80களின் தமிழ் மற்றும் மலையாளத் திரையுலக முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சரிதா, இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தரின் செல்லப் பிள்ளை என்றே அழைக்கப்பட்டு வந்தார். இவரது தனித்துவமான அழகு, மற்றும் கம்பீரமான குரலுக்கு பலர் இங்கு ரசிகர் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. இந்நிலியில், மாவீரன் படத்தில் அவர் இணைந்துள்ளது அனைவருக்கும், படத்தின் மீதான ஆரவத்தை அதிகரித்துள்ளது என்று தான் கூற வேண்டும்.