பொழுதுபோக்கு

“செங்களம்” ட்ரெய்லர் எனக்குள் பொறாமை ஏற்படுத்தியது - இயக்குனர் அமீர்...

“செங்களம்” இணையத்தொடரின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

Malaimurasu Seithigal TV

தமிழ் ஓடிடி தளங்களில் பல தரமான வெற்றிப்படைப்புகளை தந்து வரும் ZEE5 ஓடிடி நிறுவனத்தின், அடுத்த படைப்பாக வெளிவருகிறது "செங்களம்" இணையத் தொடர். Abi & Abi Entertainment PVT LTD சார்பில் அபினேஷ் இளங்கோவன் தயாரிப்பில், இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில், கலையரசன், வாணி போஜன் முக்கிய பாத்திரத்தில் இந்த இணையத் தொடரில் நடித்துள்ளனர்.

இந்த இணையத் தொடர், தென் தமிழக பின்னணியில் நடைபெறும் ஒரு பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது. இத்தொடரின்  டிரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. ZEE5 வழங்கும் “செங்களம்” இணையத் தொடர் மார்ச் 24 அன்று வெளியாகவுள்ளது.

இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன், அமீர் சாரை வெறும் இரண்டு நாட்களுக்கு முன்பு அழைத்த நிலையில், அவர் வாழ்த்து தெரிவித்தற்கு நன்றி தெரிவித்தார். இந்த கதையை ஒரு இணிஅய்த் தொடராக்க, கௌஷிக் தான் தன்னை பரிந்துரைத்ததாகக் கூறிய இயக்குனர், ZEE5 உதவியோடு தான் இந்த ‘செங்களம்’ உருவாகியுள்ளதாக கூறினார்.

ஒரு பொலிடிகல் திரில்லர் தொடராக உருவாகியுள்ள ‘செங்களம்’ தொடரில், பல ஆச்சரியங்கள் காத்திருப்பதாகக் கூறிய அவர், நடிகர்கள், கலையரசன், வாணி போஜன், விஜி மேடம், ஷாலி, கண்ணன் அனைவருமே கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளதாக பெருமை பேசினார். தனது தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் எதையும் எதிர்பாராமல் உழைத்துள்ளதாகக் கூறிய அவர், அனைவரது ஆதரவையும் கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் மற்றும் நடிகர் அமீர், இந்த தொடரின் ட்ரெயிலர் பார்த்ததும், இது போல நாம் எடுக்கவில்லை என தனக்குள் பொறாமை ஏற்படுத்தியதாகக் கூறினார். பொறாமை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் எந்த ஒரு கலையும் வெற்றி பெறுவது உறுதி என பெருமிதம் கொண்டார். தொடர்ந்து நல்ல படைப்புகளைக் கொடுக்கும் ZEE5 நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்து, ‘செங்களம்’ தொடரின் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.