பொழுதுபோக்கு

அடி பலமோ.. அவமானத்தை பற்றி  செல்வராகவன் போட்ட பரபரப்பு ட்வீட்..  கேள்வியா? கேட்கும் ரசிகர்கள்

Malaimurasu Seithigal TV

தமிழில் 'துள்ளுவதோ இளமை' படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான செல்வராகன் காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கி பிரபலமடைந்தார்.

சோசியல் மீடியாவிலும் பயங்கர ஆக்டிவாக இருந்து வரும் செல்வராகவன் இன்ஸ்டாகிராமில் நகைச்சுவையாகவும் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

இது மட்டுமன்றி தனது ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி வாழ்வியல் தத்துவங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் அவர் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் , 'ஒரு இடத்தில் உங்களை மதிக்கவில்லையா , அமைதியாய் புன்னகைத்து விட்டு அங்கிருந்து வெளியேறி விடுங்கள் ! அவமானத்தை சகித்துக் கொண்டு உண்ணும் விருந்தை விட மானத்துடன் உண்ணும் பழையது அமிர்தம்.' என்று பதிவிட்டார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் செல்வராகவனை டேக் செய்து, உங்களுக்கு ஏதாவது பிரச்னையா, என்ன ஆனது சார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்