பொழுதுபோக்கு

எனக்கு அவர்தான் வேணும்... - சீரியல் நடிகை திவ்யா அழுகை...

Malaimurasu Seithigal TV

பிரபல சின்னத்திரை நடிகராக இருந்து பல்வேறு முன்னணி தொலைக்காட்சிகளில் தொடர்களில் நடித்து வருபவர் நைனா முகமது. இவர் தனது பெயரை அர்ணவ் என மாற்றிக்கொண்டு பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த நிலையில், திவ்யா என்ற தொலைக்காட்சி நடிகையை தீவிரமாக காதலித்து வந்தார்.

ஒரு கட்டத்தில் அர்ணவ்வை திவ்யாவும் காதலித்த நிலையில் இஸ்லாமிய மதத்திற்கு மாறினால் மட்டுமே தனது வீட்டில் திருமணத்திற்கு ஒப்புக் கொள்வார்கள் என்று கூறியதையடுத்து திவ்யாவும் இஸ்லாமிய மதத்திற்கு மதம் மாறினார்.

இதனைத் தொடர்ந்து, இந்து முறைப்படியும், இஸ்லாமிய முறைப்படியும் திவ்யாவை அர்ணவ் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கடந்த ஐந்து மாதங்களாக திருவேற்காட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருவரும் வசித்து வந்த நிலையில் திவ்யா மூன்று மாத கர்ப்பிணியாக இருந்து வந்துள்ளார்.

சமீபத்தில், தனது கணவர் அர்ணவிற்கு வேறு ஒரு நடிகையுடன் பழக்கம் ஏற்பட்டதாக திவ்யாவிற்கு வந்த தகவலையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த பிரச்சனையில், தன்னை அர்ணவ் பிடித்து தள்ளி விட்டதாக கூறி சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் மூன்று மாத கர்ப்பிணியான திவ்யா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் திருவேற்காடு போலீசருக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் பேரில் திருவேற்காடு போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று நடந்த சம்பவம் குறித்து நடிகையிடம் விசாரணை செய்ய மகளிர் போலீசார் சென்றுள்ளனர்.

இதுகுறித்து எழுத்து பூர்வமான புகார்கள் ஏதும் வராத நிலையில் நடிகையின் தரப்பில் இருந்து புகார்கள் அளித்தால் முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்து மதத்தில் இருந்த நடிகையை இஸ்லாமிய மதத்திற்கு மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டு தற்போது கர்ப்பிணியான தன்னை அடித்ததாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சின்னத்திரை நடிகையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் வெளியிட்ட ஒரு விடியோவில், “எனக்கு என் கணவர் மீண்டும் வேண்டும். எனக்கும் என் குழந்தைக்கும் ஒன்றும் ஆகக் கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள்.. எப்படியாவது என் கணவர் எனக்கு மீண்டும் வேண்டும்” எனக் கண்ணீர் விட்டு கதறி அழுவது போல பகிர்டப்பட்டு வருகிறது.

மேலும், அவரது திருமணத்திற்கான அத்தாட்சிகள், அதாவது போட்டோக்கள், வீடியோக்கள் ஆகிய எதுவு வெளியிடக்கூடாது என்றும் அர்ணவ் கேட்டுக் கொண்டுள்லதாகக் கூறப்பட்ட நிலையில், இந்த வீடியோ மக்கள் மத்தியில் படு வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.

--- பூஜா ராமகிருஷ்ணன்