பொழுதுபோக்கு

விஜய் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் ஷாருக்கான்?

விஜய்யின் பீஸ்ட் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

Malaimurasu Seithigal TV

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

 இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. 

இந்நிலையில், விஜய்யின் பீஸ்ட் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டணி உறுதியானால், விஜய் - ஷாருக்கான் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.