பொழுதுபோக்கு

பாலாஜியின் பிறந்தநாளில் அம்மாவோடு கலந்துகொண்ட ஷிவானி: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்...

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான பாலாஜி முருகதாஸின் பிறந்த நாள் விழாவில் ஷிவானி அவரது அம்மாவுடன் கலந்துகொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Malaimurasu Seithigal TV

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளர்களாக கலந்துகொண்டு பிரபலமானவர்கள் ஷிவானி மற்றும் பாலாஜி முருகதாஸ்.நான்காவது சீசனில் போட்டியாளர்கள் பலரும் ஒற்றுமையாக ஒரு அணியாக தான் விளையாடி கொண்டிருந்தனர். அவரை எதிர்த்து பிக்பாஸ் வீட்டிற்குள் ஒரு அணியாக அனைத்து போட்டியாளர்களும் இருந்து வந்தனர்.  அனைத்து சீசன்களிலும் வழக்கமாக வரும் வதந்திகளை போலத்தான் இந்த நான்காவது சீஸனிலும் ஷிவானி மற்றும் பாலாஜி இடையே காதல் என்று பலர் கூறிவந்தனர். ரசிகர்கள் மட்டுமல்லாமல் நிகழ்ச்சியில் இருந்த சக போட்டியாளர்களும் கூட சில நேரங்களில் இதே தான் கூறி வந்தனர். 

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் சிறப்பு விருந்தினராக வந்த அவருடைய ஷிவானியின் அம்மா கூட பாலாஜியின் மீது தன்னுடைய மொத்த வெறுப்பையும் பார்வையாலே காட்டி இருந்தார். இந்த நான்காவது சீசன் வைரலாவதற்க்கு இவர்கள் ஒரு காரணம் தான். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விட்டு வெளியே வந்த பிறகு நாங்கள் நண்பர்கள் என்று சொல்லும் அளவிற்கு போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக வலம் வருகிறார்கள். 

 நேற்று பாலாஜியின் பிறந்தநாளுக்கு அவருடைய நண்பர்கள் மட்டுமல்லாமல், திரைத்துறையினரும், ரசிகர்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். ஆனால் இன்றைய பிறந்தநாளுக்கு நேற்று இரவு பாலாஜி அவருடைய நண்பர்கள் உடன் பிறந்த நாள் பங்க்ஷனை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார். அதில் பலர் கலந்துகொண்டு இருந்தாலும் ஷிவானி அவருடைய அம்மாவுடன் கலந்துகொண்ட போட்டோஸ்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.