பொழுதுபோக்கு

பாலிவுட் குடும்பத்திற்காக தனியாக ஒரு வரவேற்பு நிகழ்ச்சியாம்!- ரசிகர்களுக்கு குஷி...

Malaimurasu Seithigal TV

பாலிவுட் நடிகர்களில் சமீபத்தில் திருமணமான ஒரு ட்ரீம் ஜோடி தான் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி. பிப்ரவரி 7ம் தேதி ராஜஸ்தான் ஜெய்சால்மரில் உள்ள ஒரு மாளிகையில் திருமணம் செய்து கொண்டனர்.

குடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்ட இந்த திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சியின் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் அதனை இணையத்தில் படு வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது, பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்கள் என முக்கிய பிரபலங்களை அழைத்து அவர்களுக்காக தனியே ஒரு வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு, ஷாருக்கான், அக்ஷய் குமார், கரண் ஜோகர், வருண் தவான், அஜய் தேவ்கன், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பல பாலிவுட் திரை பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், இந்நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர் சந்திப்பு இருக்க போவதாகவும் தகவல்கள் குறுகின்றன.