பொழுதுபோக்கு

சுரேஷ் காமாட்சியுடன் கேக் வெட்டி மாநாடு வெற்றியை கொண்டாடிய சிம்பு: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்...

மாநாடு படத்தின் வெற்றியை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியுடன் கேக் வெட்டி கொண்டாடிய  நடிகர் சிம்புவின் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Malaimurasu Seithigal TV

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மாநாடு படம் வெளியீடு தள்ளிப் போனது,  தீபாவளிக்கு வெளிவரவில்லை என்றால் முதல்வர் வீட்டு முன் உண்ணாவிரதம் இருக்க தயங்க மாட்டோம் என சிம்புவின் பெற்றோர் ஆவேசமாக பேசியது என மாநாடு எப்போதும் லைம் லைட்டில் இருந்தது. படத்தின் ட்ரெய்லரில் எஸ்.ஜே.சூர்யா பேசிய வந்தான் சுட்டான் போனான்.. ரிப்பீட்டு டயலாக் இன்ஸ்டன்ட் ஹிட்டாகி அப்படி என்னதான் படத்தில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியது.

இவையெல்லாம் சேர்ந்து முதல் நாள் முதல் காட்சிக்கு ரசிகர்கள் திரையரங்கில் குவிந்தனர். படமும், அதன் திரைக்கதையும், காட்சிகளின் விறுவிறுப்பும் சபாஷ் போட வைக்க, திரையிட்ட இடங்கள் அனைத்திலும் காட்சிகளின், திரையரங்குகளின் எண்ணிக்கையை அதிகரித்தனர். மாநாடு படத்தின் வெற்றியை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியுடன் கேக் வெட்டி கொண்டாடிய  நடிகர் சிம்புவின் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.