பொழுதுபோக்கு

80 நாட்களை வெற்றிகரமாக எட்டிய சிம்புவின் "மாநாடு".. ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் வெளியான படம் மாநாடு.. டைம் லூப் அடிப்படையில் இப்படம் உருவாகியுள்ளது.

Malaimurasu Seithigal TV

நடிகர் சிம்பு, எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷினி, கருணாகரன், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கடந்த நவம்பர் 25ஆம் தேதி வெளியான படம் மாநாடு..  இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார்..  திரையரங்குகளில் வெளியான நாளில் இருந்தே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இப்படத்தின் கதை ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.. எஸ்ஜே சூர்யாவுக்கும், வெங்கட் பிரபுவிற்கு இப்படம் சிறப்பாக கைகொடுத்தது. படத்தில் ஒவ்வொருவரின் நடிப்பும் மிக சிறப்பாக இருந்தது. அவர்களின் பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர்.. 

டைம் லூப் என்ற கான்செப்ட் தமிழ் சினிமாவில் புதிதாக இருந்தாலும்... அதை சிறப்பான திரைக்கதையால் அதை சிறப்பாக கொடுத்துள்ளார் வெங்கட் பிரபு...  

இந்நிலையில், "மாநாடு" படம் 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிவருகிறது.. இது குறித்து படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.. இந்த படம் சிம்புவிற்கு சிறப்பாக கைகொடுத்துள்ளது.. அவர் அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.