பொழுதுபோக்கு

மீண்டும் தியேட்டரில் ரிலீஸாகும் சூரரைப் போற்று.. சூர்யா அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

Malaimurasu Seithigal TV

சூர்யா நடிப்பில் வெளியாகி உலகளவில் வரவேற்பை பெற்ற படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாகிருந்த இந்த படத்தில் சூர்யா ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். மேலும் ஊர்வசி, காளிவெங்கட், கருணாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். 

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்துக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது.  

இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூரரைப் போற்று பாலிவுட்டில் ரீமேக் செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது. மேலும் ஒரு சர்ப்ரைஸ் தகவல்கள் கிடைத்துள்ளது.

கேரளாவில் மீண்டும் தியேட்டர்களில் சூரரைப் போற்று படத்தை வெளியிட போவதாக அறிவித்துள்ளனர். இதனை நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு ஹாட் போட்டு ரீ-ட்வீட் செய்துள்ளார்.