பொழுதுபோக்கு

மணிரத்தினத்திற்கு போட்டியாக களம் இறங்கும் சௌந்தா்யா ரஜினிகாந்த்..!!

Malaimurasu Seithigal TV

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படம் இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளது பாகுபலி படத்தைப் போலவே இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. இப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம், பிரபு உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். 

இந்நிலையில் பொன்னியின் செல்வன் நாவலை வெப் தொடராக இயக்கும் முயற்சியில் நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா இறங்கியுள்ளார். இந்த தொடருக்கு புதுவெள்ளம் என்று பெயர் வைத்துள்ளார். 

விநாயகர் சதுர்த்தி அன்று இந்த வெப் தொடருக்கான அறிவிப்பை செளந்தர்யா வெளியிட்டுள்ளார்.  இயக்குனர் ஷங்கரிடம் பணியாற்றிய சரத்குமார் ஜோதி இயக்க உள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை சௌந்தர்யா அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.