பொழுதுபோக்கு

திடீர் திருப்பம்... மாநாடு திரைப்படம் திட்டமிட்டபடி நாளை ரீலிஸ்...

நடிகர் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் திட்டமிட்டபடி நாளை திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Malaimurasu Seithigal TV

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் நாளை அதாவது நவம்பர் 25-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் திடீரென மாநாடு திரைப்படத்தினை நாளை வெளியிடுவது தள்ளி வைக்கப்படுவதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி  தனது ட்விட்டர் பக்கத்தில்  அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில் தற்போது மீண்டும் மாநாடு திரைப்படம் திட்டமிட்டப்படி நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.