பொழுதுபோக்கு

எதிர்நீச்சல் படத்தில் நடித்த பழம்பெரும் நடிகை மரணம்!! திரை பிரபலங்கள் இரங்கல்!!

எதிர்நீச்சல் படத்தில் நடித்த பழம்பெரும் நடிகையான ஜெமினி ராஜேஸ்வரி காலமானார்.

Malaimurasu Seithigal TV

காரைக்குடியை சேர்ந்த ஜமுனா ராஜேஸ்வரி என்ற இயற்பெயர் கொண்ட அவர், சந்திரலேகா படத்தில் குரூப் டான்சராக ஆடியதன் மூலம் ஜெமினி ராஜேஸ்வரி என அறியப்பட்டவர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்த இவர், 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடனமாடியதோடு, 60 படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்தவர். 16 வயதினிலே படத்தில் காந்திமதியுடன் சண்டை இடுவது போன்ற காட்சியின் மூலம் பிரபலமடைந்தவர், கடைசியாக சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் படத்திலும் நடித்திருந்தார். 

கிட்டத்தட்ட 65 ஆண்டுகாலம் திரையுலகில் கோலோச்சிய ஜெமினி ராஜேஸ்வரி தனது 94 வயதில் காலமானார். இவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.