பொழுதுபோக்கு

சமந்தாவை தொடர்ந்து ஐட்டம் சாங்குக்கு நடனம் ஆடிய தமன்னா.!!

நடிகை சமந்தா போல பிரபல ஹீரோவின் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாவுள்ளார் தமன்னா.

Malaimurasu Seithigal TV

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி - நயன்தாரா உடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையே, நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் ”ஓ சொல்றியா” என்ற பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். இதற்கு விமர்சனங்கள் எழுந்தாலும் இப்பாடல் மெகா ஹிட் ஆனது.

இந்நிலையில் நடிகை சமந்தா போல நடிகை தமன்னாவும் நடிகர் வருண் தேஜ் ஹீரோவாக நடிக்கும் 'கனி' என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இப்பாடல் வரும் 15 ஆம் தேதி காலை ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.