பிக்பாஸ் ஆரவ் நடித்த மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் காவ்யா தாபர் (26).
இவர் கடந்த வியாழக்கிழமை மும்பையில் இரவு விருந்தை முடித்து விட்டு ஆண் நண்பர்களுடன் தனது காரில் வந்துள்ளார். அப்போது காரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நின்று கொண்டிருந்த வாகனத்தின் பின்புறத்தில் மீது அவரது கார் மோதியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் காவ்யா தாபரிடம் விசாரித்த போது, அவர் மது அருந்தி இருப்பது தெரியவந்தது. இதன் பிறகு காவல்துறையினர் அவரை கைது செய்ய மூன்றுள்ளனர். அதற்கு அவர் காவல்துறையினரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல், விசாரணை செய்த பெண் காவலரை கீழே தள்ளி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசார், காவ்யா தாபரை கைது செய்து அந்தேரி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.