பிரபல தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பு ஆகி வரும் ரியாலிட்டி ஷோ ஒன்றில் போட்டியாளர்கள் தொடர்ந்து அத்துமீறி நடந்து கொண்டிருப்பதாக பல எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி நெதர்லாந்தில் ஒளிபரப்பான பிக் பிரதர்ஸ் நிகழ்ச்சியை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டது. ஒரு கட்டுப்பாடான வீடு சூழல் சின்னத்திரை நடிகர்கள், மற்றும் பிரபலமான நபர்கள், நடிகர்க என 20 மேற்பட்ட போட்டியாளர்கள் 100 நாட்கள் வாழ வேண்டும். இவர்களின் செயல்பாடுகள் அந்த வீட்டில் உள்ள கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு ஒளிபரப்பாகும்.
மேலும் உள்ளே உள்ள போட்டியாளர்கள் அவர்களேதான் அவர்களுக்கு தேவையான உணவுகளை சமைத்துக் கொள்ள வேண்டும். மேலும் வீட்டை சுத்தமாக வைத்துக் கொண்ட இதர அத்தியாவசிய வேலைகளையும் அவர்கள் தான் செய்து கொள்ள வேண்டும். இதற்கிடையில் அவ்வப்போது கேட்கும் குரல் மூலம் போட்டியாளர்களுக்கு சில அறிவுரைகள் கூறுவது, சில கட்டளைகளை சொல்வது, குறிப்பிட்ட வேலைகளை செய்யுமாறு டாஸ்க் கொடுப்பது என இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, தமிழ் போல அனைத்து மொழிகளிலும் நடத்தப்பட்டு வரும் நிலையில் தமிழில் இதுவரை 8 சீசன்கள் முடிந்து தற்போது 9 வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் 7 சீசன்களை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் கடந்த சீசன் மற்றும் இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார், இந்த சீசனில் கலந்து கொண்டு உள்ளே விளையாடி கொண்டிருக்கும் போட்டியாளர்கள் பொது மேடையின்றி நாகரீகம் இல்லாமல் தேவையற்ற வார்த்தைகளை பேசுவது, இரட்டை அர்த்தம் தரும் வகையில் பேசுவது, வன்முறையை தூண்டும் வகையில் நடந்து கொள்வது என செய்து வருவதாக தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பி வந்தன.
கன்னட மொழியில் நடத்தப்பட்டு வந்த நிகழ்ச்சியை அந்த அரசாங்கம் சுற்றுச்சூழலுக்கு எதிராக உள்ளது என தடை செய்தது. இதே போல ஒரு சபை நாகரீகம் இல்லாமல், குழந்தைகள் பார்ப்பார்கள் என்ற ஒழுக்கமில்லாமல் தேவையற்ற ஒழுகின முறையில் போட்டியாளர்கள் நடந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சியையும் தடை செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியினர் இன்று EVP பிலிம் சிட்டியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் நிகழ்ச்சியின் தயாரிப்பாளருக்கு எதிராக கோஷங்கள் போட்டும், நிகழ்ச்சியின் தொகுப்பாளராக விஜய் சேதுபதியின் புகைப்படத்தை செருப்பால் அடித்தும் போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.