நடிகர் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
சூர்யாவின் 39வது படத்தை தா.செ.ஞானவேல் என்பவர் இயக்கியுள்ளார். இந்தப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தீர்ப்பு வழங்கிய ஒரு வழக்கினையே ‘ஜெய் பீம்’ படமாக உருவாக்குகிறார்கள் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், வரும் நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ‘ஜெய் பீம்’ வெளியாகிறது.
இந்த நிலையில், இன்று இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. டீசரில் ’பாதிக்கப்பட்டவங்களுக்கு மறுக்கப்பட்ட நீதி அவங்களுக்கு நடந்த அநீதியை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும்’, ‘இந்த சாதில இருக்கவங்க திருட்டு கேஸில் கன்வெர்ட் ஆகுறது ரொம்ப சகஜம் சார்’... ‘திருடன் இல்லாத சாதி இருக்கா நட்ராஜ்’.. உங்க சாதி என் சாதின்னு எல்லா சாதிலும் பெரிய பெரிய திருடன் இருக்காங்க’ போன்ற வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன.