பொழுதுபோக்கு

கார்த்தியின் “ஜப்பான்” திரைப்படம் செப்டம்பரில் வெளியீடு?

Tamil Selvi Selvakumar

நடிகர் கார்த்தி நடிக்கும் 'ஜப்பான்' திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க, ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தியின் 25வது படமான ‘ஜப்பான்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் தயாராகுகிறது. 

நடிகர் கார்த்தி வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கவுள்ள இப்படத்தில், ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ள இந்த படத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். இன்னும் 30 நாள் காட்சிகள் படமாக்கப்பட உள்ள நிலையில், வரும் செப்டம்பர் மாதம் ' ஜப்பான்' திரைப்படம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.