பொழுதுபோக்கு

வெளியானது சூர்யாவின் 40-வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்...

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 40-வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

Malaimurasu Seithigal TV

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 40 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் தற்காலிகமாக சூர்யா 40 என்று அழைக்கப்பட்டது. அந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் நாளை சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இன்று மாலை 6 மணிக்கே சூர்யா 40 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.  இதனை சூர்யா புகைப்படத்துடன் ட்வீட் செய்தது சன் பிக்சர்ஸ். மேலும் நினைவூட்டல் வீடியோக்களையும் வெளியிட்டது.