பொழுதுபோக்கு

”விக்ரம்” படத்தின் ஹிந்தி ட்ரைலர் வெளியானது...! ஆனால் படத்தின் பெயர் என்ன தெரியுமா..?

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக உள்ள “விக்ரம்” திரைப்படத்தின் ஹிந்தி ட்ரைலர் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது.

Tamil Selvi Selvakumar

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள  திரைப்படம் ”விக்ரம்”. உலகளவில் ரசிகர்களை வைத்துள்ள நடிகர் கமல்ஹாசன் அரசியல், பிக்பாஸ் நிகழ்ச்சி என்று பல காரணங்களால் தொடர்ந்து படங்களில் நடிக்காமல் இருந்தார். ஆனால் தற்போது 4 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இவரது நடிப்பில் விக்ரம் படம் உருவாகி சர்வதேச அளவில் ஜீன் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனிடையே சமீபத்தில் ”விக்ரம்” படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியானது. அந்த ட்ரைலரில் கமலுடன் விஜய் சேதுபதி, சூர்யா, பகத் பாசில், நரேன் உள்ளிட்டவர்களும் நடிப்பில் மிரட்டியுள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகரிக்க செய்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ஹிந்தி ட்ரைலர் சற்றுமுன்னர் வெளியாகி உள்ளது. அதில் இந்த படத்தின் பெயர் விக்ரம் ஹிட் லிஸ்ட் என்று வைக்கப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு மாஸான எக்ஸ்பீரியன்சை கொடுக்கும் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.