பொழுதுபோக்கு

ஓராண்டு நிறைவுப்பெற்ற விஜய்யின் மாஸ்டர்!! கடந்து வந்த பாதையின் பயண வீடியோவை கொண்டாடிய ரசிகர்கள்

மாஸ்டர் கடந்து வந்த பாதை...

Tamil Selvi Selvakumar

நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவுபெற்றதையொட்டி, அவரது ரசிகர்கள் அதனை ட்விட்டரில் டிரண்ட் செய்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

கொரோனா காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு, பின்னர் திறக்கப்பட்டன. இருப்பினும் தொற்று பரவல் அச்சம் காரணமாக மக்கள் திரையரங்கிற்கு வருவதை தவிர்த்து வந்தனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் கடந்தாண்டு வெளியான விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் நல்ல மாற்றத்தை தந்தது.

இந்நிலையில், மாஸ்டர் திரைப்படம் கடந்த வந்த பாதை குறித்த பயண வீடியோவை படக்குழுவினர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.