பொழுதுபோக்கு

இளம்பெண் ஒருவருடன் ரெஸ்டாரண்டில் லஞ்ச் சாப்பிடும் நடிகர் தனுஷ்!! யார் அந்த பெண்? கேள்வி எழுப்பும் நெட்டிசன்ஸ்

Tamil Selvi Selvakumar

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் தனுஷ் சமீபத்தில் தனது காதல் மனைவியுடனான 14 வருட திருமண பந்தத்தை முடித்து கொள்வதாக அறிவித்திருந்தார். பின்னர் இந்த வ்வாகரத்து குறித்த தகவல்களும் கிசுகிசுக்களும் அவ்வப்போது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. மேலும் இவர்கள் மீண்டும் சேர்வார்களா? என்ற கேள்வியும் இணையத்தில் உலா வந்த வண்ணம் உள்ளது. 

ஆனால் இதற்கு சம்பந்தப்பட்ட இருவரும் தங்களது வேலைகளில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர்.  தற்போது கூட தனுஷ் ‘வாத்தி’ பட ஷூட்டிங்காக ஹைதராபாத்தில் உள்ளார். இந்த படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் தனுஷ் இளம்பெண் ஒருவருடன் ரெஸ்டாரண்டில் லஞ்ச் சாப்பிடும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

படப்பிடிப்பின் இடையே தனுஷ் ஐதராபாத்தில் உள்ள ரெஸ்டாரன்ட் ஒன்றில் லஞ்ச் சாப்பிடும் புகைப்படம் சமூக வலைதளங்களில்  தற்போது வைரலாகி வரும் நிலையில்,  இந்த புகைப்படத்தில் அவருடன் இருக்கும் அந்த இளம் பெண் அவரது காஸ்ட்யூம் டிசைனர் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே இருவரும் லஞ்ச் சாப்பிட்டுவிட்டு ஒரு சில மணி நேரங்கள் அந்த ரெஸ்டாரண்டில் இருந்ததாகவும் அதன் பின்னர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் தகவல் கூறப்படுகிறது. ஏற்கனவே, தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து பிரச்சனை தொடர்பாக பல்வேறு கிசுகிசுக்கள் பரபரப்பாக பேசப்படும் நிலையில், தற்போது வெளியாகிருக்கும் இந்த புகைப்படம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.