பொழுதுபோக்கு

நானும் சூப்பர்ஸ்டார் ஆகணும்... அடம்பிடிக்கும் ரஜினி மருமகன்!! காத்திருக்க சொல்லும் மனைவி...

நடிகர் ரஜினிகாந்தின் 2வது மருமகன் விசாகன் சினிமாவில் கதாநாயகனாக நடிக்க ஆசைப்படுவதாகவும், சௌந்தர்யா விசாகனின் சினிமா முட்டுக்கட்டை போடுவதாகவும் தகவல் கசிந்துள்ளது.

Malaimurasu Seithigal TV

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் செளந்தர்யாஇளம் தொழிலதிபரான விசாகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விசாகனின் தந்தை இந்தியாவில் புகழ்பெற்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர். சுமார் ரூபாய் 6,000 கோடி மதிப்பிலான சொத்துக்களுக்கு அவர் அதிபதி. இளம் தொழிலதிபராக இருக்கும் விசாகனுக்கு சினிமா ஹீரோ ஆக வேண்டும் என்பது ஆசை.

அதனால் அமெரிக்காவில் உள்ள நடிப்பு கல்லூரி ஒன்றில் சேர்ந்து நடிப்பு கலையை அவர் கற்றுத் தேர்ந்திருக்கிறார். விசாகனும் ஒரு ஹீரோ ரேஞ்சில் இப்போது இருக்கிறார். சினிமாவில் அவரை கொண்டு வர பிரபல இயக்குநர்கள் விசாகனை அணுகியுள்ளனர்.

இதுகுறித்து, மனைவி செளந்தர்யாவிடம் விசாகன் சொல்ல, அவரின் சினிமா கனவுகளுக்கு தடை போட்டாராம். சினிமாவில் நடித்து புகழ் பெறுகிறபோது, விசாகனை யாரேனும் கொத்திக்கொண்டு போய்விட்டால் என்ன செய்வது என்கிற அச்சம்தான் செளந்தர்யா தடை போட காரணம் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.

சினிமா எனக்கு முழு நேரத் தொழிலாக இருக்காது; எங்க பிசினஸ்தான் மிக முக்கியம். ஒரு ஹாபிக்காக ஒரு திரைப்படம் பண்ணலாமே என செளந்தர்யாவிடம் விசாகன் விளக்கம் அளித்தும், ஏற்க மறுக்கிறார் அவர். இதனால் விசாகனும் அவரது குடும்பத்தினரும் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர் என்கின்றன ரஜினி குடும்பத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள்.