பொழுதுபோக்கு

காட்டுப்பயலே பாடல் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை.! 

சூரரைப் போற்று' படத்தில் இடம் பெற்ற 'காட்டுப்பயலே' பாடல் தற்போது 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

Malaimurasu Seithigal TV

தமிழ் சினிமா பாடல்களில் அதிக பார்வைகளைப் பெற்ற பாடலாக 'ரவுடி பேபி' பாடல் 1300 மில்லியன் பார்வைகளைக் கடந்து முதலிடத்தில் உள்ளது. 

25க்கும் மேற்பட்ட பாடல்கள் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த பாடலாக உள்ளன. அந்தக் கணக்கில் புதிதாக 'சூரரைப் போற்று' படத்தில் இடம் பெற்ற 'காட்டுப்பயலே' பாடல் தற்போது 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து இடம் பிடித்துள்ளது. 

ஜிவி பிரகாஷ்குமார் இசையில், சினேகன் எழுதி, தீ பாடிய பாடல் இது. இதற்கு முன்பு சூர்யா நடித்த என்ஜிகே படத்தின் அன்பே பேரன்பே, தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் 'சொடக்கு மேல..' ஆகிய பாடல்கள் 100 மில்லியனைக் கடந்துள்ளன. 

ஜிவி பிரகாஷ் இசையமைத்த தமிழ் பாடல்களில் இதற்கு முன்பு 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த பாடலாக 'தெறி' படத்தின் 'என் ஜீவன் பாடல் மட்டுமே உள்ளது. இப்போது இரண்டாவது பாடலாக 'காட்டுப்பயலே' 100 மில்லியன் பட்டியலில் இணைந்துள்ளது.