பொழுதுபோக்கு

தேவா மறைந்த துயரமே தீரவில்லை.. குடும்பத்தை உலுக்கிய மற்றொரு மரணச் செய்தி! யார் இந்த கார்த்திக் சபேஷ்?

நடிகர் சந்தானம் உடன் இடம்பெற்றிந்த காட்சிகள் மூலம் நன்கு அறியப்பட்டவர் கார்த்திக் சபேஷ்

Muthu Lakshmi

மறைந்த திரைப்பட இசையமைப்பாளர் தேவா அவர்களின் சகோதரர் மறைந்த இசையமைப்பாளர் சபேஷ் அவர்களின் மகன் கார்த்திக் சபேஷ் (37)  உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா அவர்களால் ட்ரீம்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் துணை நடிகர் கார்த்திக் சபேஷ்.

நடிகர் கார்த்திக் சபேஷ் ட்ரீம்ஸ், வல்லவன், காதல் சொல்ல வந்தேன், தகிட தகிட, உதயம் NH4 மற்றும் விஷால் நடிப்பில் வெளியான பட்டத்து யானை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் காமெடி வேடம் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். குறிப்பாக பட்டத்து யானை திரைப்படத்தில் நடிகர் சந்தானம் உடன் இடம்பெற்றிந்த காட்சிகள் மூலம் நன்கு அறியப்பட்டவர் கார்த்திக் சபேஷ் 

மறைந்த தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் மகன் ஸ்ரீகாந்த் தேவா போபோ சசி மற்றும் முன்னணி நடிகர் ஜெய் உள்ளிட்டோர்கள் இவரது சகோதரர்கள் ஆவார். தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் மறைந்து இரண்டு நாட்கள் முடிவடைந்த நிலையில் தேவா குடும்பத்தில் மற்றும் ஒரு மரணச் செய்தி மறைந்த தேனிசை தென்றல் தேவா அவர்களின் குடும்பத்தை மிகவும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.