பொழுதுபோக்கு

கிழக்குச்சீமையிலே கெட்டப்பில் வெளிவந்த "உடன்பிறப்பே" போஸ்டர்..!!

ஜோதிகா, சசிகுமாரின் உடன்பிறப்பே படத்தின் போஸ்டர் மிரட்டலாக வெளியாகி உள்ளது.

Malaimurasu Seithigal TV

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சசிகுமார். இவரின் அடுத்த படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. இப்படத்தின் ஜோதிகா இணைந்துள்ளார். 

இப்படத்தை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் தயாரித்துள்ளது. தற்போது இப்படத்தை அமேசன் பிரைம்மில் வருகிற அக்டோபர் மாதம் வெளியிட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தை பார்க்கும் போது கிழக்குசீமையிலே நடித்த ராதிகா போலவே இருப்பதாகவும் மேலும் பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கலாம் என பலரும் கூறி வருகின்றனர். மேலும் இப்படம் கிராமத்தை மையமாக கொண்டுஎடுக்கப்பட்டுள்ளது என படக்குழுவினர் கூறியுள்ளனர்