லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பாடல் ஒன்றுக்கு நடிகை யாஷிகா சேலையில் உச்சகட்ட கவர்ச்சியுடன் போஸ் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இருட்டு அறையில் முரட்டு குத்து, துருவங்கள் பதினாறு, ஜாம்பி உள்பட பல படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.
சமீபத்தில் நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்த யாஷிகா, நான்கு மாதங்களுக்கு மேலாக தீவிர சிகிச்சை எடுத்து வந்தார். பின் அதிலிருந்து மீண்டு வந்து தற்போது தொடர்ந்து போட்டோஷூட்களை ஆரம்பித்து அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கருப்பு நிற உடை அணிந்து நயன்தாராவின் பாடலுக்கு போஸ் கொடுக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ’நான் பிழை’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
அனிருத் இசையில் உருவான இந்த மெலடி பாடலுக்கு நடிகை யாஷிகா கருப்பு காஸ்ட்யூமில் உச்சகட்ட கிளாமருடன் கூடிய போஸ்களை கொடுத்துள்ளார். இந்த வீடியோவை யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில், ஏராளமான லைக்ஸ்களை பெற்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.