பொழுதுபோக்கு

தங்கலான் படத்தை வெளியிட தடை இல்லை - ஐகோர்ட்

மாலை முரசு செய்தி குழு

தங்கலான் திரைப்படத்தை வெளியிட எந்தத் தடையும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா 10 கோடி ரூபாயை கடனாக பெற்று திருப்பி செலுத்தவில்லை எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தங்கலான் படத்தை வெளியிடும் முன் 1 கோடி ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு நிபந்தனை விதித்திருந்தது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி 1 கோடி ரூபாய் பணத்தை சொத்தாட்சியர் கணக்கில் செலுத்தியதாக ஞானவேல் ராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து,

தங்கலான் படத்தை வெளியிட அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.