பொழுதுபோக்கு

இனிமேல் அதெல்லாம் கிடையாது.. Full-ஆம் இங்க தான் - நடிகை ரோஜா எடுத்த அதிரடி முடிவு

நடிகையாக கலக்கி வந்த ரோஜா.. அரசியலிலும் குதித்து கலக்கி வருகிறார்.

Suaif Arsath

ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக நேற்று முன்தினம் பதவி ஏற்றார். இதற்கு நடிகைகள் ராதிகா, குஷ்பு உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், அமைச்சராக பதவி ஏற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரோஜா,  நான் இனிமேல் சினமா மற்றும் டிவி சீரியல்களில் நடிக்க மாட்டேன்.. எம்எல்ஏ-வாக இருந்த போது ஒரு சில படங்களிலும், டிவி சீரியல்களிலும் நடித்து வந்ததற்கு பலர் விமர்சனம் செய்து வந்ததாகவும் கூறிய அமைச்சர் ரோஜா தற்போது  அமைச்சர் பொறுப்பில் இருப்பதால், வேலை அதிகாமாக இருக்கும் எனவே இனி திரை படங்களில் மற்றும் டிவி சீரியல்களில் நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.