பொழுதுபோக்கு

தனுஷ் எனக்கு பட வாய்ப்பு கொடுத்தது இதுக்குதான்.. சீக்ரெட்டை வெளியில் சொன்ன டிடி

Malaimurasu Seithigal TV

தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி மக்களிடம் நல்ல வரவேற்பையும், தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. சின்னத்திரை வட்டாரங்களில் அதிக சம்பளம் வாங்கும் தொகுப்பாளர் என்றால் அது டிடி தான். 

நெருங்கிய நண்பரான ஒருவரை கடந்த காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடந்து முடிந்த கொஞ்ச நாட்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.

அதன்பின்னர் அவர் தொகுப்பாளினியாக பயணத்தை தொடர்ந்து வருகிறார். இவர் முன்பு போல் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவில்லை என்றாலும், முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வரும் டிடி, பவர் பாண்டி திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது குறித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

ஒருமுறை நடிகர் தனுஷ் எனக்கு போன் செய்து தான் இயக்கும் படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று கூறினார். தனுஷ் மாதிரி ஒருத்தர் கேட்க்கும்பொழுது வேண்டாம் என்று எப்படி சொல்வது. அதனால் நானும் சந்தோஷமாக அதற்கு ஒப்புக் கொண்டேன் என கூறியுள்ளார் டிடி.

மேலும் தனுஷ் என்னிடம் இந்தப் படத்தில் லேடிஸ்க்கு ஒரு மெசேஜ் சொல்லணும், அதை மக்களுக்கு மிகவும் பரிச்சயமான முகம் என்றால் நன்றாக இருக்கும் அதனால் தான் உங்களை தேர்ந்தெடுத்தேன் என்று கூறினார். 

தற்போது துருவ நட்சத்திரம், ஜோஸ்வா போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதிலும் ஜோஸ்வா திரைப்படத்தில் டிடி போலீஸ் கேரக்டரில் மிகவும் துணிச்சலாக நடித்துள்ளார். இதுகுறித்த ட்ரெய்லர் ஒன்று சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.