கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நடிகைகளின் காதல் செய்திகள் ரசிகர்களிடையே எப்போதும் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்துவது வழக்கம். விராட் கோலி–அனுஷ்கா ஷர்மா, கே.எல். ராகுல்–அதியா ஷெட்டி போன்ற ஜோடிகளுக்குப் பிறகு, தற்போது புதிய பெயராக தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் திலக் வர்மா குறித்து டேட்டிங் வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் இந்திய அணியில் விளையாடும் திலக் வர்மா, சமீபத்தில் ஒரு ஹோட்டல் லாபியில் நடந்து சென்றபோது அவரது சக வீரர் சூர்யகுமார் யாதவ் அவரை “He is in love” என்று கிண்டல் செய்ததாக கூறப்படும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. இதைத் தொடர்ந்து ஸ்ரீலீலா–திலக் இடையே தொடர்பு இருப்பதாக ரசிகர்கள் யூகிக்கத் தொடங்கினர். ரெட்டிட் மற்றும் சமூக வலைதளங்களில் பலரும் இந்த வதந்திகள் குறித்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். சிலர் இது உண்மையான உறவாக இருக்கலாம் என கூற, மற்றவர்கள் இது பிஆர் விளம்பர முயற்சி அல்லது கவனத்தை ஈர்க்கும் யுக்தி என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஒரு போட்டியின் போது, மற்ற வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து ஸ்ரீலீலாவின் தாயார் ‘பேமிலி பாக்ஸ்’ பகுதியில் அமர்ந்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத் தொடர்ந்து, ஸ்ரீலீலா திலக் வர்மாவுடன் டேட் செய்யலாம் என்ற யூகங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவத் தொடங்கின. இதன் காரணமாகவே அவரது தாயாருக்கு மும்பை மைதானத்தின் குடும்ப இருக்கைப் பகுதிக்குள் அனுமதி கிடைத்திருக்கலாம் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் உடனடியாக பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
இதற்குமுன், 2025 டிசம்பரில் வைகுண்ட ஏகாதசி கொண்டாட்டங்களின் போது, ஸ்ரீலீலா தனது தாயாருடன் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவிலுக்குச் சென்றதாக ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதே நேரத்தில் தற்செயலாக திலக் வர்மாவும் தனது குடும்பத்தினருடன் அதே கோவிலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுவும் இருவருக்கிடையேயான தொடர்பு குறித்த வதந்திகளுக்கு மேலும் தூண்டுகோலாக அமைந்துள்ளதாக இணையவாசிகள் பேசுகின்றனர். IPL போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளில் ஸ்ரீலீலாவின் குடும்பத்தினர் மற்றும் திலக் வர்மா ஒரே நேரத்தில் சில இடங்களில் காணப்பட்டதாக கூறப்படுவதும் இந்த வதந்திகளுக்கு மேலும் தூண்டுகோலாக அமைந்துள்ளது.
இதுவரை இந்த வதந்திகள் குறித்து இருவரும் எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை. இதனால் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகவே இந்த “கிரிக்கெட்–கோலிவுட் காதல்” கதை தொடர்கிறது. இதற்கிடையில், நடிகை ஸ்ரீலீலா தனது திரைப்பட பணிகளில் தொடர்ந்து பிசியாக உள்ளார். ‘பகவந்த் கேசரி’ போன்ற படங்களில் அவரது நடிப்பு பாராட்டை பெற்றுள்ளது. கிரிக்கெட் உலகில் திலக் வர்மாவும் தனது சிறப்பான ஆட்டத்தால் கவனம் ஈர்த்து வருகிறார்.
உண்மை உறவா அல்லது வெறும் வதந்தியா என்பது குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லாத நிலையில், இந்த செய்தி தற்போது முழுக்க முழுக்க இணையவாசிகளின் யூகங்களாகவே நீடிக்கிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.