பொழுதுபோக்கு

வார்த்தை தேவையில்லை... எமோஜிக்கள் போதும்.. இன்று உலக எமோஜிக்கள் தினம்  

சமூகவலைத்தளங்களில் தான் வெளிப்படுத்தக்கூடிய சில எமோஷன்ஸ்களை எமோஜிக்கள் மூலமாக தான் மக்கள் வெளிப்படுத்துக்கின்றன. ஜூலை 17 அன்று உலக எமோஜிக்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

Malaimurasu Seithigal TV

மஞ்சள் நிறத்தில் உள்ள எமோஜிக்கள்தான் சமூக வலைத்தளங்களில் முக்கிய தகவல் பரிமாற்ற கருவியாக உள்ளது. 

வார்த்தைகள் எதுவும் தேவையின்றி, இந்த சிறிய எமோஜிக்களே பல விஷயங்களை பலருக்கும் புரியவைக்கின்றன. இத்தகைய எமோஜிகளின் அர்த்தங்கள் வெவ்வேறு நாடுகளுக்கு, நபர்களுக்கு, கலாச்சாரங்களுக்கு ஏற்ற வகையில் வேறுபடுகின்றன.

எமோஜிகள் என்பது  எமோஷன்ஸ்களை வெளிப்படுத்துவதற்கு பரிமாற்ற கருவியாகும். அதிகளவில் சொற்களைப் பயன்படுத்தாமல் உணர்ச்சிகளை வெளிப்படுத்த எளிதான வழி எமோஜிக்கள்தான். 

சமூக வலைத்தளங்கள் தற்போது உலகின் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப மொழிகளை மாற்றி சேவைகளை வழங்குகின்றன. ஆனால் உலகின் எந்த மொழிக்கும், நாட்டிற்கும் பொதுவாக பயன்படுத்தப்படுவது எமோஜிக்கள்தான்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17 அன்று உலக ஈமோஜி தினம் கொண்டாடப்படுகிறது. லண்டனை தளமாகக் கொண்ட எமோஜிபீடியாவின் நிறுவனர் ஜெர்மி பர்க் இந்த நாளை 2014 இல் உருவாக்கியதாகக் கூறப்படுகிறது.