ஐஎம்டிபி வெளியிட்ட இந்தியாவின் மிகப்பிரபலமான நடிகர்கள் பட்டியலில் தனுஷ் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
மிகப்பிரபலமான 10 இந்தியப் பிரபலங்களின் பட்டியலை ஐஎம்பிடி வெளியிட்டுள்ளது. அதில் தமிழ் நடிகர் தனுஷ் முதலிடத்தையும் ஆலியா பட் இரண்டாம் இடத்தையும் சமந்தா ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளனர். நான்காம் இடத்தில் ராம்சரண் தேஜாவும், 6ம் இடத்தில் ரித்திக் ரோஷனும், 9ம் இடத்தில் அல்லு அர்ஜுனும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | இந்த படக்குழு எனது குடும்பமாக மாறிவிட்டது... - நடிகர் பரத்
இதன் மொத்த பட்டியல் இதோ...
ஒட்டு மொத்த இந்தியாவிலுமே, அனைத்து நடிகர்களையும் பின்னுக்குத் தள்ளி, தென்னிந்திய, அதும், தமிழ் நடிகரான தனுஷ் முதலிடத்தைப் பிடித்திருப்பது பெரும் குஷியை, கோலிவுட் ரசிகர்களுக்குக் கொடுத்துள்ளது. மேலும், முதல் பத்து இடத்தில், வெறும் மூன்று இடங்களில் மட்டுமே பாலிவுட் நடிகர்கள் இருப்பதால், வட இந்திய சினிமா ரசிகர்களுக்கு பெரும் கவலை உருவாகியுள்ளது.
உலகளவில் அறியப்படும் ஐஎம்டிபி-யின் முதல் 10 நடிகர்கள் பட்டியலில் தென்னிந்திய நடிகர்கள் ஆட்சி செய்திருப்பது அனைவருக்கும் குஷியைக் கொடுத்துள்ளது.