KGF படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, நீண்ட இடைவெளிக்குப் பிறகு யஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘டாக்சிக்’. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்தப் படம், சர்ச்சைகளையும் கலவையான விமர்சனங்களையுமே பெற்றுள்ளது.
ஒரே நாளில் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்திருந்தாலும், பெண்களை அளவுக்கு அதிகமாக பாலியல் தன்மையுடன் சித்தரித்திருப்பது மற்றும் பெண் விரோதக் கருத்துகளைக் கொண்டிருப்பது தொடர்பான சர்ச்சையிலும் சிக்கியுள்ளது.
முன்னாள் பாஜக தலைவரும், ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனருமான கே. அண்ணாமலை, இப்படத்தில் இடம்பெற்றுள்ள பெண் விரோதக் கருத்துகள் தொடர்பாகக் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். மேலும், இந்தப் படத்திற்கு அனுமதி வழங்கியது குறித்து மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தையும் (சிபிஎஃப்சி) விமர்சித்துள்ளார்.
இந்தப் படத்தின் வெற்றி கவலை அளிப்பதாகத் தெரிவித்த அவர், இதுபோன்ற படங்களை குழந்தைகள் பார்த்தால், பெண்களை அவர்கள் அணுகும் விதத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளார்.
அண்ணாமலை, "ஒழுங்குமுறைகள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும்... பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களில் கூட, எந்தெந்தக் காட்சிகளை அனுமதிக்கலாம் என்பது குறித்து தணிக்கை வாரியம் உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டும்.
இந்தப் படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.104 கோடி வசூல் செய்துள்ளது. பெண்களை ஒரு குறிப்பிட்ட விதத்தில் இப்படங்களில் காட்டுகிறார்கள். இதை நாம் தினமும் குழந்தைகளுக்குக் காட்டினால், இந்த நாட்டில் பெண்களுக்கு என்ன நடக்கும்?
நாங்கள் ஒவ்வொரு ஊருக்கும், கல்லூரிக்கும் சென்று பெண்கள் பாதுகாப்பு குறித்துப் பேசுகிறோம். ஆனால், தணிக்கை வாரியமோ இந்தப் படத்திற்கு அனுமதி தருகிறது. இந்தப் படம் பெண்களுக்கு தகுந்த மரியாதை அளிக்கிறதா? இல்லை. படங்களில் நடக்கும் பல விஷயங்கள் உங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்" எனப் பேசியுள்ளார்.
இந்த படத்தின் ட்ரெயிலர் மற்றும் போஸ்டர்கள் வந்தபோதே பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன. அதுகுறித்து ஹைதராபாத்தில் நடைபெற்ற 'டாக்சிக்' முன்-வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் யஷ், "டிரெய்லரில் தெரிவது போல் இல்லாமல், இந்தப் படத்தில் பெண்களுக்கான குரல் இருக்கிறது. படத்தைப் பார்த்து ரசியுங்கள். பெண்களே, நீங்கள் அனைவரும் இதை நன்றாக ரசிப்பீர்கள்" எனப் பேசியிருந்தார்.
ஆனால் முழு படமும் வெளியானபிறகும் பெண்களின் சித்தரிப்பு மீது பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கின்றன.
இந்த படத்தில் நயன்தாரா, தாரா சுதாரியா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி மற்றும் ருக்மிணி வசந்த் என ஐந்து நடிகைகள் உள்ளனர். இதன் இயக்குநர் கீது மோகன் தாஸ் ஒரு பெண்ணாக இருந்து ஆண் மைய பார்வையில் பெண்களை போக பொருளாக சித்தரித்து எடுத்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் போஸ்டர்கள் வெளியானபோதே பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன. இதுகுறித்து ஹைதராபாத்தில் நடைபெற்ற ‘டாக்சிக்’ முன் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் யஷ், "டிரெய்லரில் தெரிவது போல் இல்லாமல், இந்தப் படத்தில் பெண்களுக்கான குரல் இருக்கிறது. படத்தைப் பார்த்து ரசியுங்கள். பெண்களே, நீங்கள் அனைவரும் இதை நன்றாக ரசிப்பீர்கள்" எனப் பேசியிருந்தார்.
ஆனால், முழுப் படமும் வெளியான பிறகும் பெண்களின் சித்தரிப்பு மீது பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கின்றன.
இந்தப் படத்தில் நயன்தாரா, தாரா சுதாரியா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி மற்றும் ருக்மிணி வசந்த் என ஐந்து நடிகைகள் உள்ளனர். இதன் இயக்குநர் கீது மோகன் தாஸ் ஒரு பெண்ணாக இருந்தும், ஆண் மையப் பார்வையில் பெண்களைப் போகப் பொருளாகச் சித்தரித்து எடுத்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.