பொழுதுபோக்கு

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூர்யா நடித்துள்ள ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் டிரைலர், பொங்கலன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Malaimurasu Seithigal TV

சூர்யா நடித்துள்ள ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் டிரைலர், பொங்கலன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

பாண்டிராஜ் இயக்கத்தில், சூர்யா, சத்தியராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ’எதற்கும் துணிந்தவன்’. டி.இமான் இசையில் பாடல்கள் மற்றும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன.

கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் பிப்ரவரி 4ம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ’எதற்கும் துணிந்தவன்’ படம் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் டிரைலர், பொங்கல் திருநாளன்று வெளியாகும் என கூறப்படுகிறது.