பொழுதுபோக்கு

வாத்தி படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு...!

Malaimurasu Seithigal TV

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் வாத்தி படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

திருச்சிற்றம்பலம், நானே வருவேன் என தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார் தனுஷ். அவர்து நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் தான் வாத்தி. இதில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை சம்யுக்தா மேனன் முதலாவதாக தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்கிறார். தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லுரி இயக்கத்தில் தமிழில் வாத்தி என்றும் தெலுங்கில் சார் என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

மேலும் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக படத்தின் முதல் சிங்கில் பாடலான ‘வா வாத்தி ‘ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது அந்த பாடலை ஒரு சிறுமி அழகாக பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அரிவித்துள்ளது. முன்னதாக டிசம்பர் 2- ஆம் வெளியாகும் என சொல்லபட்டிருந்த நிலையில், தற்போது மாற்றப்பட்டுள்ளது.  படத்தின் பணிகள் முடிவடையாததால் படமானது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17 - ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

-- சுஜிதா ஜோதி