பொழுதுபோக்கு

‘பாகுபலி 2’ படத்தின் சாதனையை முறியடித்த ‘வலிமை’

‘வலிமை’ படத்திற்கு புக் மை ஷோ தளத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர்  ஆர்வம் தெரிவித்துள்ளனர்.

Malaimurasu Seithigal TV

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி இணைந்துள்ளார்.

இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சண்டை காட்சி மட்டுமே எஞ்சியுள்ளது. இதனை அடுத்த மாதம் படமாக்க உள்ளனர். வலிமை படம் குறித்து இதுவரை எந்தவித அப்டேட்டும் வெளியாகாத நிலையிலும், இப்படம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

வெளியாகவிருக்கும் படங்களுக்கு புக் மை ஷோ தளத்தில் ரசிகர்கள் ஆர்வம் தெரிவிக்கலாம். அந்த அடிப்படையில் ‘வலிமை’ படத்திற்கு 10 லட்சத்துக்கும் அதிகமானோர்  புக் மை ஷோ தளத்தில் ஆர்வம் தெரிவித்துள்ளனர். 

இதன்மூலம் ‘பாகுபலி 2’ சாதனையை வலிமை முறியடித்துள்ளது. இதையடுத்து இந்திய அளவில் வலிமை இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த பட்டியலில் 17 லட்சம் எண்ணிக்கையுடன் ‘அவென்ஜர்ஸ் எண்டு கேம்’ திரைப்படம் முதலிடம் பிடித்துள்ளது.