பொழுதுபோக்கு

வலிமை, சர்க்கார்-லாம் போலாம்.. "RRR வந்துடுச்சி".. மொத்த வசூலை இரண்டே நாளில் அடித்த ராஜமௌலி.. அல்டிமேட் ரிப்போர்ட்!!

Suaif Arsath

வலிமை, சர்க்கார் படத்தின் மொத்த வசூலை இரண்டே நாட்களில் ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் முறியடித்துள்ளதாக அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

மாபெரும் வெற்றிப் படமான பாகுபலிக்கு பின் ராஜமௌலி இயக்கியுள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களான ராம்சரண், ஜுனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்துள்ள இத்திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் சுமார் 11 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், முதல் நாளில் மட்டும் 200 கோடிக்கு மேல் வசூலாகியதாக கூறப்பட்ட ஆர்.ஆர்.ஆர் திரைப்படம், இரண்டு நாளில் 340 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.