madras high couret  
பொழுதுபோக்கு

வனிதா விஜய்குமாரின் படத்துக்கு சிக்கல்..! “உயர்நீதிமன்றத்தில் இளையராஜா புகார்!!

வனிதா விஜய்குமார் மற்றும் நடன இயக்குனர் ராபர்ட் நடிப்பில் உருவாகியுள்ள மிசஸ் & மிஸ்டர் (MRS & MR) திரைப்படம்...

மாலை முரசு செய்தி குழு

நடிகை வனிதா விஜய்குமார் நடிப்பில் உருவாகியுள்ள மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடலை நீக்க கோரி இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நடிகை வனிதா விஜய்குமார்  மற்றும் நடன இயக்குனர் ராபர்ட் நடிப்பில் உருவாகியுள்ள மிசஸ் & மிஸ்டர் (MRS & MR)  திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளைஞராஜா இசையமைத்து மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தில் இடம்பெற்ற ராத்திரி சிவ ராத்திரி பாடல் இடம்பெற்றுள்ளது.

தான் இசையமைத்த பாடலை தன்னுடைய அனுமதியில்லாமல் மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் பயன்படுத்தி இருப்பதாகவும், பாடலை மாற்றி அமைத்துள்ளதாகவும் இளைராஜா தரப்பில் சிவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது காப்புரிமை மீறிய செயல் என்றும் உடனடியாக அந்த பாடலை திரைப்படத்தில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும் எனவும் இளையராஜா மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி இளையராஜா தரப்பில் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன் இளைஞராஜா தரப்பு வழக்கறிஞர் ஏ. சரவணன் முறையீடு செய்தார்.

முறையீட்டை கேட்ட நீதிபதி, வழக்கினை திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக ஒப்புதல் அளித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.