பொழுதுபோக்கு

வாத்தி கம்மிங் பாடலுக்கு குழந்தைகளுடன் நடனமாடிய விஜய்..! ட்ரெண்டாகும் வீடியோ

நடிகர் விஜய் குழந்தைகளுடன் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamil Selvi Selvakumar

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியிருந்த “பீஸ்ட்” திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ள நடன இயக்குநர் சதீஷின் குழந்தைகளுடன் நடிகர் விஜய் நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

அப்படி என்ன பாடலுக்கு டான்ஸ் பண்ணாருன்னு பாக்குறீங்களா..? நடிகர் விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளியான “மாஸ்டர்” திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு தான் தற்போது விஜய் சதீஷின் குழந்தைகளுடன் இணைந்து நடனமாடியுள்ளார்.

இது குறித்த வீடியோ தான் தற்சமயம் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.