பொழுதுபோக்கு

’விடுதலை’ படத்தில் 11 இடங்களில் வசனங்கள் மியூட்...?

Tamil Selvi Selvakumar

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாக உள்ள விடுதலை திரைப்படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.

நகைச்சுவை நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.

விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் வருகிற மார்ச் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், 'விடுதலை' படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இப்படத்தில் 11 இடங்களில் கெட்ட வார்த்தைகள் வரும் காட்சிகள் வசனங்கள் மியூட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.