பொழுதுபோக்கு

இந்தப்படத்துக்கு  விக்னேஷ் சிவன்  சம்பளமே வாங்கலையாம்..!!

நடிகர் அஜித் நடிப்பில் வெளியாக உள்ள 'வலிமை' படத்தில்  2 பாடல்களை எழுதியதற்கு விக்னேஷ் சிவன் சம்பளம் வாங்க மறுத்துவிட்டார்.

Malaimurasu Seithigal TV

நடிகர் அஜித் நடிப்பில் வெளியாக உள்ள 'வலிமை' படத்தில்  2 பாடல்களை எழுதியதற்கு விக்னேஷ் சிவன் சம்பளம் வாங்க மறுத்துவிட்டார்.

நானும் ரவுடிதான் , தானா சேர்ந்த கூட்டம் , போடா போடி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது விஜய் சேதுபதியை வைத்து 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தை இயக்கி வருகிறார்.

அவர் இயக்குனராக மட்டுமல்லாமல் பாடலாசிரியராகவும் வலம் வருகிறார் .இதில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியாக உள்ள 'வலிமை' படத்திலும் இரண்டு பாடல்களை எழுதியுள்ளார். 'நாங்க வேற மாதிரி', 'அம்மா' என 2 பாடல்களை எழுதியுள்ளார்.

இந்த 2 பாடல்களை எழுதியதற்கு அவர் சம்பளம் வாங்க மறுத்துவிட்டார். எதையும் எதிர்பார்க்காமல் முழு அர்ப்பணிப்போடு பாடல் எழுதிய விக்னேஷ் சிவனுக்கு பலரும் பாராட்டி உள்ளனர் .