பொழுதுபோக்கு

“அவ எனக்கு இன்னொரு அம்மா மாதிரி” - உருகி உருகி காதலித்த விஜய் - சங்கீதா.. ஒரு ஃபிளாஷ்பேக்!

எனக்குச் சங்கீதா அமைஞ்ச மாதிரி, எல்லோர் வாழ்க்கையிலும் ஒரு நல்ல பொண்ணு வருவா...

மாலை முரசு செய்தி குழு

தொடக்கத்தில் விஜயின் தீவிர ரசிகையாக இருந்த சங்கீதா, பின் காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டர். ஒரு ரசிகை தனக்கு பிடித்த நடிகரை மணந்த நெகிழ்வான காதல் கதை இவர்களுடையது. 1996-ல் வெளியான "பூவே உனக்காக திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாட்டு வாழ் தமிழர்கள் பலரும் ரசிகர்களாக கிடைத்தனர். அப்படி அவரை சந்தித்து பாராட்ட வந்தார் தான் சங்கீதா. பின் இருவரும் நட்பாக பழகிவந்தனர். இந்த நட்பு மலர்ந்து காதலாக மாறியது.

அதனையடுத்து இருவருக்கும் 1999 ஆகஸ்ட் 25 அன்று திருமணம் நடைபெற்று, திரைத்துறையில் பலரும் ரசிக்கும் தம்பதியாக இருந்தனர். தற்போது இரண்டு குழந்தைகளும் உள்ளனர். லண்டனில் வளர்ந்த சங்கீதா, விஜயின் தீவிர ரசிகையாக இருந்தார், பின்னர் விஜய் -ன் நடிப்பு மற்றும் அன்பால் ஈர்க்கப்பட்டு, அவரை காதலித்து மணந்தார். அவர்களின் இரண்டாவது சந்திப்பின்போதே விஜயை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்தார் சங்கீதா.

தங்களது காதல் குறித்து ஒரு நாளிதழிற்காக இருவரும் அளித்த பேட்டியில், "காதலிச்சுக் கல்யாணம் பண்றது ஒரு வகை; கல்யாணம் பண்ணிட்டுக் காதலிக்கிறது இன்னொரு வகை. நான் ரெண்டாவது வகை. காதலிக்க , கல்யாணம் பண்ண பொண்ணு தேடற ஒவ்வொரு பையனுக்கு இருக்கிற எதிர்பார்ப்பு என்னன்னா, நம்ம அம்மா மாதிரி ஒரு பொண்ணு வேணும்ங்கிறதுதான். நான் எதிர்பார்த்தது போலவே அதே பாசம், கோபம், கனிவு, கண்டிப்புனு சங்கீதா எனக்கு இன்னொரு அம்மா" என்று விஜய் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் அவர் மனைவி " இருவருக்கும் பிடிச்சு தான், உடனடியா கல்யாணம் வரைக்கும் வந்தாச்சு!’’ எனவும் மகிழ்வாக பதிலளித்தார். விஜய் "ஒரு நல்ல காதல் உங்களை இன்னும் உயரத்துக்கு கொண்டு போகும், செதுக்கும், இந்த உலகத்தையே காதலிக்க வைக்கும், எனக்குச் சங்கீதா அமைஞ்ச மாதிரி, எல்லோர் வாழ்க்கையிலும் ஒரு நல்ல பொண்ணு வருவா" என்றும் தன் காதலின் சுவரசியான பக்கத்தை ரசிகர்களுக்கு பகிர்ந்தார்.

விஐய் - சங்கீதா திருமணம் நடைபெற்று - 27 வருடங்களுக்கு பிறகு தற்போது விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார் சங்கீதா. இன்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரித்து கோரி மனு அளித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. அதில் அவர் தன் கணவர் விஜய், நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும், 2021 ஏப்ரல் மாதம் எனக்கு தெரியவந்தது என்றும் குறிப்பிட்டிருக்குகிறார்.பின்னர் அதை கண்டித்தும் அவர் மாற்றிக்கொள்ள வில்லை எனவும் குறிபிட்டுயுள்ளார்.

அனைத்து தரப்பினரின் மதிப்பை காக்கும் வகையில் தற்போதைக்கு நடிகையின் பெயரை வெளியிடாமல் தவிர்க்கிறேன்; "நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் நடிகைக்கும் எனது கணவருக்கும் உள்ள உறவை வெளிப்படுத்தும் ஆதாரங்களை வழங்குவேன்" - எனவும் சங்கீதா மனுவில் குறிப்பிட்டுளளார்.

இந்த விவாகரத்து மனு அவரின் ரசிகர்களிடையேயும், தவெக தொண்டர்களிடையேயும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது அவரின் அரசியல் களத்திலும் பெரும் அதிர்வை ஏற்படுத்தும் எனப்படுகிறது. மேலும் 2026 சட்ட மன்ற தேர்தல் நெருக்கும் நேரத்தில் இது அதிர்ச்சியாகயுள்ளது. அதை தொடர்ந்து பலரும் சமூகவலைத்தளத்தில் தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.